English Sentences | Tamil Meaning |
---|---|
A batch of pupils | மாணவர் குழு |
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A troupe of actors | நடிகர்களின் ஒரு குழு |
Anything more? It is three hundred and eighty rupees | வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது |
Are any our class friends studying in this college? | நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா? |
As he drank on and on his health is in bad condition | அவன் மேலும் மேலும் குடித்தால் அவனது ஆரோக்கியம் மோசமான நிலையில் இருக்கிறது |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
As you like | நீங்கள் விரும்பியபடி / உங்கள் விருப்பப்படி |
As you like/As you please | உங்கள் விருப்பம் போல் |
Ask his friends if you want to know more about him | உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள் |
Avoid bad companions | கெட்டவர்களின் நட்பை விலக்கிவிடு |
Bad habits grow unconsciously | கெட்ட பழக்கங்கள் தங்களை அறியாமல் வளர்கிறது |
Bad men make good lawyers | கெட்ட மனிதர்கள் நல்ல வழக்கு அறிஞர்கள் ஆவார்கள் |
Be careful against bad habits | உன் கெட்டப் பழக்கத்தின் விஷயத்தில் கவனமாக இரு |
Be quiet in the classroom | வகுப்பு அறையில் அமைதியாய் இரு |
Boy, bring a cup of vanila ice cream | பையா, ஒரு கோப்பை வெண்ணிலா பனிக்கூழ் கொண்டுவா |
Can i give some compact discs to you? | நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா? |
Can I give some fruits? | இன்னும் சிறிது பழங்களைக் கொடுக்கட்டுமா? |
Can I give you a pen? | நான் உங்களுக்கு ஒரு எழுதுகோல் கொடுக்கட்டுமா? |
Can you give a clue? | எனக்கு ஒரு துப்பு கொடுக்க முடியுமா? |
Can you give five rupees? | நீங்கள் எனக்கு ஐந்து ரூபாய் கொடுக்க முடியுமா? |
Can you give me a lift? | நீங்கள் என்னை கூட்டிச்செல்ல முடியுமா? |
Can you give me your bicycle in exchange for my watch? | என்னுடைய கைக்கடிகாரத்தை பதிலாக உன்னுடைய சைக்கிளை தர முடியுமா? |
Can you lend me a hundred rupees? | எனக்கு நூறு ரூபாய் கடன் கொடுப்பாயா? |
Can you make a cup of tea for me, please? | தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பீர்களா? |
Can you please give me a pen? | நீங்கள் எனக்கு ஒரு எழுதுகோல் தர முடியுமா? |
Climb up the tree | மரத்தின் மேலே ஏறு |
Corruption and violence are the ideals today | லஞ்சமும், வன்முறையும் தான் இன்று உயர்ந்த கொள்கையாக கருதப்படுகிறது |
Could you please give me some fruits? | தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா? |
Cow gives birth calf | பசு கன்றை ஈன்றெடுக்கும் |
David and Albert went up the hill | டேவிட் மற்றும் ஆல்பர்ட மலைக்கு மேலே சென்றார்கள் |
Did he give you any certificate? | அவர் உனக்கு ஏதாவது நற்சாட்சிப் பத்திரம் கொடுத்தாரா? |
Did you get up early in the morning? | காலையில் நீங்கள் சீக்கிரம் எழுந்தீர்களா? |
Discipline gives freedom | சட்டதிட்டங்கள் நமக்கு சுதந்திரத்தை கொடுக்கிறது |
Do as you like | நீ விரும்வது போலவே செய் |
Do not act like a fool | முட்டாள் மாதிரி நடக்காதே |
Do not behave like this | இது போன்று நடக்காதே |
Do not cry like children | குழந்தைப் போல் அழ வேண்டாம் |
Do not depend upon others | மற்றவர்களையே நம்பி இருக்காதே |
Do not depent upon others | மற்றவர்களை நம்பி இருக்காதே |
Do not do like that | அப்படிச் செய்யாதே |
Do not give ear to his rumours | வதந்திகளுக்கு செவி சாய்க்காதே |
Do not held up the work | வேளையில் குறுக்கிடாதே |
Do not interrupt | குறுக்கீடு / இடைஞ்சல் செய்யாதே |
Do not interrupt others | இடைமறித்து பேசாதே |
Do not laugh in the class | வகுப்பில் சிரிக்காதே |
Do not lose your temper, In getting angry, you are just like your father | உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள் |
Do not pay attention to her temporary dislikes | அவனுடைய தற்காலிக அதிருப்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் |
Do not skip your supper | உன்னுடைய இரவு உணவை தவறவிடாதே |
Do not talk in the class room | வகுப்பறையில் பேசாதே |
Do not talk like that | அப்படி பேசாதே |
Do not talk to me like that | நீ என்னிடம் அப்படி பேசாதே |
Do not yawn in the class | வகுப்பில் கொட்டாவி விடாதே |
Do not you give any reduction? | விலையை குறைக்கமாட்டீர்களா? |
Do up your shoes | உங்கள் காலணிகளை சரியாக போட்டுக்கொள் |
Do you like cool drinks? | நீங்கள் ஒரு குளிர் பானத்தை விரும்புகிறீர்களா? |
Do you like date fruits? | நீ பேரீச்சம் பழத்தை விரும்புகிறாயா? |
Do you like lime pickle? | நீ எலுமிச்சை ஊறுகாயை விரும்புகிறாயா? |
Do you like me? | நீங்கள் என்னை விரும்புகிறீர்களா? |
Do you like one more cup? | இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா? |