வணக்கம்! பாடம் 11-ல் NOUN, PRONOUN, ADJECTIVE, VERB and ADVERB பற்றி பார்த்தோம். இனி பாடம் 12-ல் வினை உருப்பிடைச்சொல் (Preposition) பற்றி பார்ப்போம்.
ஒரு வாக்கியத்தில் வருகின்ற பெயர்ச்சொல் [NOUN] உடன் மற்றொரு பெயர்ச்சொல் [NOUN] அல்லது பெயர் உரிச்சொல் என்னும் இவற்றுள் ஏதாவது ஒன்றுக்குள் உள்ள தொடர்பை விளக்குவதற்கு பயன்படுத்தப்படும் சொல் உருப்பிடைச்சொல் (அ) முன்னிடைச்சொல் [PREPOSITION] எனப்படும்.
| PREPOSITION | MEANING |
|---|---|
| about | பற்றி |
| above | மேல் |
| across | குறுக்கே |
| after | பிறகு |
| against | எதிராக |
| along | வழியாக, நெடுக்கில், அதனோடு |
| among | மத்தியில், நடுவே |
| around | சுற்றிலும் |
| as | போல |
| at | இல், இடத்தில் |
| before | முன்னால் |
| behind | பின்னால் |
| beside | அருகில் |
| besides | மேலும், கூட |
| between | இடையில் |
| beyond | அப்பால், தவிர |
| by | ஆல் |
| during | பொழுது |
| except | தவிர |
| for | க்கு / க்காக |
| from | இருந்து |
| in | இல், உள்ளே |
| inside | உள்ளே |
| into | இல், உள்நோக்கி |
| like | போல, அதுமாதிரி |
| near | அருகில் |
| of | இன், உடைய |
| on | மேலே, இல் |
| outside | வெளியே |
| over | மேலே |
| since | இருந்து |
| through | மூலம் |
| till | வரைக்கும் |
| to | க்கு, வரை |
| towards | நோக்கி |
| under | அடியில், கீழ் |
| up | மேலே |
| with | உடன் |
| within | உள்ளாக |
| without | இன்றி |
PREPOSITION -கள் தமிழ் மொழியில் [NOUN] பெயர்ச்சொல்லுக்குப் பின்னாலும், ஆங்கில மொழியில் [NOUN] பெயர்ச்சொல்லுக்கு முன்னாலும் வருகின்றன.