English Sentences | Tamil Meaning |
---|---|
A crush of tourists | ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு |
A haggle of agitators | கிளர்ச்சியாளர்கள் கூட்டம் |
A motor car is beyond my capacity | மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது |
A museum is place of history, Is not it? | பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே? |
A plain mirror, To use while riding | சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும் |
A Quater to nine / 8:45 | எட்டுமணி நாற்பத்தைந்து நிமிடம் |
A troupe of actors | நடிகர்களின் ஒரு குழு |
A violent storm | ஒரு ஆவேசமான புயல் |
A woman’s sword is her tongue | ஒரு பெண்ணின் ஆயுதம் அவள் நாவு தான் |
Actor acts according to the advice of the directors | இயக்குனர்களின் யோசனைப்படி நடிகர்கள் நடிக்கிறார்கள் |
Add extra sugar to the tea | தேநீரில் கூடுதலாக சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள் |
Add some sugar. Then you will be able to eat | சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும் |
Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
All are requested to reach in time | எல்லோரும் உரிய நேரத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
All people went to the temple | அனைத்து மக்களும் கோவிலுக்குச் சென்றனர் |
All roads lead to Rome | அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும். |
Allow me to live | என்னை வாழவிடுங்கள் |
Allow me to say | கூற அனுமதிக்கவும் |
Allow me to speak | என்னை பேச அனுமதியுங்கள் |
Almost all the actors are tried to follow Sivaji Ganesan | கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள் |
Always keep to left | எப்பொழுதும் இடது புறமாக செல்லவும் |
Always keep to the left | எப்பொழுதும் இடதுபுறமாக செல் |
An Empty pot is an item that can be used to hold a variety of liquids | ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும் |
Animal cytology | பிராணி செல்லியல் |
Antony set off for Delhi early this morning | அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார் |
Any more witness to examine? | வேறு ஏதாவது சாட்சிகளை கேட்க வேண்டியது இருக்கிறதா? |
Anything to drink | ஏதாவது குடிப்பதற்கு |
Apply oil to the head | தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக்கொள் |
Are not you going to cemetery? | இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா? |
Are the shops open tomorrow? | கடைகள் நாளை திறக்கப்படுகிறதா? |
Are they observing harthal tomorrow? | நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா? |
Are you a tourist or on business? | நீங்கள் ஒரு சுற்றுலா பயணி அல்லது வணிகரா? |
Are you fasting today? | நீ இன்று விரதம் இருக்கிறாயா? |
Are you prepared to withdraw your charges against me? | நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா? |
Are you ready to join in our friend's company? | என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா? |
Are you related to the groom or to the pride? | நீங்கள் மாப்பிள்ளையின் உறவுக்காரரா? அல்லது பெண்ணின் உறவுக்காரரா? |
Are you surprised to see me? | என்னைப் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்களா? |
As soon as I saw my mother, I ran to meet her | நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன் |
As the ox is useful to us we must treat it kindly | எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும் |
Ascham taught latin to queen Elizabeth | அஸ்காம் ராணி எலிசபெத்திற்கு லத்தின் மொழி கற்றுத்தந்தார் |
Ask her not to create doubt | சந்தேகத்தை உண்டாக்கவேண்டாம் என்று அவளிடம் கேட்டுக்கொள் |
Ask his friends if you want to know more about him | உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள் |
Ask your friend to close the window | ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள் |
Astrologer said respecting the zodiac stones | ஜோதிடர் ராசிகற்களை குறித்து கூறினார் |
At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
At what o' clock will the Yercaud express reach to Chennai? | எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்? |
Attend to your work | உன்னுடைய வேலையை கவனி |
August 15, 1947 is an event in the history of india | ஆகஸ்ட் 15 ,1947 இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும் |
Be careful. Hold on to my hand | மிகவும் ஜாக்கிரதை. எனது கைகளை பிடித்துக் கொள் |
Be merciful to the poor people | ஏழை மக்களிடம் கருணையுடன் இரு |
Because Rose was poor, she had to abandon her idea of going to college | ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று |
Before you arrived to the theatre the show had begun | நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Before you arrived to the theatre the show had begun | நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Beginning to understand | புரிந்து கொள்ளத் தொடங்குகிறேன் |
Both of them fell into the river | அவர்கள் இருவரும் ஆற்றில் விழுந்தார்கள் |
Bridges are built to cross rivers | நதிகளை கடப்பதற்கு பாலங்கள் கட்டப்படுகிறது |
But day after tomorrow I have to return it | ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் |
But I sent the gift, to you | ஆனால் நான் உங்களுக்கு பரிசு அனுப்பியுள்ளேன் |
But it will take you from the present to the past and the future | ஆனால், அது உங்களை நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்திக்கும் எதிர் காலத்திக்கும் அழைத்துச் செல்லும் |
But today it is late by 2 hours. By the way, what brought you here? | ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க |