English Sentences | Tamil Meaning |
---|---|
Can you tell me why they are late? | அவர்கள் ஏன் தாமதம் என்று என்னிடம் சொல்லமுடியுமா? |
Do you know why she went home? | அவள் வீட்டுக்குச் சென்றது ஏன் என்று உங்களால் சொல்லமுடியுமா? |
Hallo Charlus, why are you here? | ஹலோ சார்லஸ், நீங்கள் எதற்காக இங்கு இருக்கின்றீர்கள்? |
He asked why I come | நான் ஏன் வருகிறேன் என்று அவர் கேட்டார் |
Hello Sir, why did you send word to me? Any new work? | ஹலோ ஐயா, எனக்கு சொல்லி அனுப்பியிருந்தீர்களே? ஏதாவது புதிய வேலை இருக்கின்றதா? |
I do not know why | ஏன் என்று எனக்குத் தெரியவில்லை |
I don’t know why he is behaving like this. I think someone is setting him up | அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அவனைத் தூண்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் |
I will tell you 'why he did it' | அவன் அதை ஏன் செய்தான் என்று நான் உனக்கு நிச்சயமாக கூறுவேன் |
If my friend were alive why lament the past | என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும் |
If you do not drink, why bother about the price of wine? | நீ குடிப்பழக்கம் இல்லதவனாயிருந்தால், ஏன் அதன் விலையைப் பற்றி கவலைப் படுவானேன் |
It is why I would hate to smoke at present | அதனால் தான் நான் இப்போது புகைபிடிக்க வெறுக்கிறேன் |
No . Why should I help you? | இல்லை. ஏன் நான் உனக்கு உதவ வேண்டுமா? |
Of course. That is why I am in a mood, you know? | கண்டிப்பாக. அதனால் தான் நான் நல்ல உற்சாகமாக இருக்கிறேன் என்று புரியவில்லையா? |
Simon said ’why should I go to school’ | சைமன் 'ஏன் நான் பள்ளி செல்ல வேண்டும்' என்றார் |
That is why he is not bothered about job | அதனால் தான் அவன் வேலையைப் பற்றி எதுவும் கவலைப்படுவது இல்லை |
That is why I am here | அதனால் தான் வந்தேன் |
That is why you are not to be seen here these days | அதனால் தான் உங்களை இங்கு சில நாட்களாக பார்க்க முடியவில்லை |
That’s why I asked you | அதனால்தான் நான் உன்னைக் கேட்டேன் |
The fish monger was late today that is why | மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான் |
Then why are you going to meet the doctor? | பின் எதற்க்காக நீ மருத்துவரை சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறாய்? |
To find out why | ஏன் என கண்டுப்பிடிக்க |
We are supposed to keep it, that is why | நாங்கள் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.. அதனால் தான் |
We do not have the stock here, That is why | இங்கே எங்களிடம் இருப்பு இல்லை, அதனால் தான் |
We have to discuss a new work. That is why | நாம் ஒரு புதிய வேலையை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். அதனால்தான் |
Why are these blood thirsty? | ஏன் இந்த கொலை வெறி? |
Why are you always suspicious of me? | நீ ஏன் எப்பொழுதுமே என்னை சந்தேகப்படுகிறாய்? |
Why are you angry | நீங்கள் ஏன் கோபமாக இருக்கிறீர்கள் |
Why are you hanging about here? | இங்கே ஏன் நீ சுற்றித் திரிகிறாய்? |
Why are you here? | நீ ஏன் இங்கு வந்தாய்? |
Why are you hoarse? | உன்னுடைய தொண்டை ஏன் கரகரப்பாக உள்ளது? |
Why are you late in bringing the lunch? | மதிய உணவு கொண்டுவர உனக்கு ஏன் தாமதமாகி விட்டது? |
Why are you late? | நீங்கள் ஏன் தாமதம்? |
Why are you limping? | நீங்கள் ஏன் நொண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்? |
Why are you making faces at me? | ஏன் என்னை அழகு காண்பிக்கிறாய்? |
Why are you meddling in my affairs? | நீ ஏன் என்னுடைய காரியங்களில் தலையிடுகிறாய்? |
Why are you panting? Did you run? | நீ ஏன் மூச்சு வாங்குகிறாய்? நீ ஓடினாயா? |
Why are you sitting here? | நீங்கள் இங்கு ஏன் உட்கார்ந்து இருக்கிறீர்கள்? |
Why are you so envious? | நீ ஏன் பொறுமையோடு இருக்கிறாய்? |
Why are you so late? | ஏன் இவ்வளவு தாமதம்? |
Why are you so short tempered? | ஏன் நீ மிகவும் சீக்கிரமாக கோபப்பட்டு விடுகிறாய் |
Why are you speaking like this? | நீ ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய்? |
Why are you staring at me? | நீ ஏன் என்னை வெறுத்துப் பார்க்கிறாய்? |
Why are you wearing a torn shirt? | நீ ஏன் கிழிந்த சட்டையை அணிந்து கொண்டிருக்கின்றாய்? |
Why are you weeping? | நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? |
Why are you worried? | நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? |
Why can’t you take it out? | உங்களால் ஏன் அதை வெளியே எடுக்க முடியவில்லை? |
Why did you not come ? | நீங்கள் ஏன் வரவில்லை ? |
Why did not bring my compact disc? | ஏன் என்னுடைய குறுந்தகடு கொண்டு வரவில்லை? |
Why did not you call me? | என்னை ஏன் அழைக்கவில்லை? |
Why did not you wake me up? | என்னை நீ ஏன் எழுப்பவில்லை? |
Why did they sit there? | அவர்கள் ஏன் அங்கு அமர்ந்திருக்கிறார்கள்? |
Why did you call me? | ஏன் என்னை அழைத்தீர்கள்? |
Why did you do this? | நீ ஏன் இதைச் செய்தாய் |
Why did you go far away from me? | என்னை விட்டு ஏன் வெகுதூரம் சென்றீர்கள்? |
Why did you heave sigh? | நீ ஏன் பலமாக பெருமூச்சு விடுகிறாய்? |
Why did you not go earlier? | நீங்கள் முன்பே ஏன் செல்லவில்லை? |
Why did you not mail to your manager? | நீ உன் மேலாளருக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பவில்லை? |
Why did you not place the laptop on the desk | சாய்வு மேஜையின் மீது ஏன் மடிக்கணினி வைக்கவில்லை |
Why did you not send a leave letter? | ஏன் நீங்கள் ஒரு விடுமுறை கடிதம் போடவில்லை? |
Why did you not wake me up? | என்னை ஏன் எழுப்பவில்லை? |