பல நாட்களாக வயிற்றில் நிறைய வலி இருக்கிறது
English Sentences | Tamil Meaning |
---|---|
Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
All of the students have handed in their homework | மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள் |
All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
All the papars will have been marked | எல்லாத் தாள்களும் சோதிக்கப்பட்டு விட்டிருக்கும் |
Always wear khadi clothes | எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து |
Are you producing any film? so I have heard | நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன் |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
Be content with what you have | உள்ளதை வைத்துக்கொண்டு நீ திருப்தியாக இரு |
Bears have thick fur | கரடிக்கு கடினமான உரோமம் உள்ளது |
Because Rose was poor, she had to abandon her idea of going to college | ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று |
Before you arrived to the theatre the show had begun | நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Before you arrived to the theatre the show had begun | நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Behave yourself | நன்றாய் நடந்து கொள் |
Birds and animals have died | பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன |
Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு |
Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது |
But day after tomorrow I have to return it | ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் |
But for her help, he could not have studied well | அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது |
By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
Can I have your ticket, please? | தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?) |
Can I have a glass of water? | எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா? |
Can I have multiple accounts? | நான் பல கணக்குகளை வைத்திருக்க முடியுமா? |
Can I have some advices? | நான் சில அறிவுரைகளைப் பெறலாமா? |
Can I have your name, please? | தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? |
Can I have your opinion? | நான் உங்கள் கருத்தை அறியலாமா? |
Can I have your shirt? | நான் உங்களுடைய சட்டையை வைத்துக்கொள்ள முடியுமா? |
Can't I have at least two seats? | இரண்டு இடங்களாவது எனக்கு கிடைக்காதா? |
Cell phones have become a real status symbol among school students | அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது |
Come let have a tea | தேநீர் அருந்தலாம் வாருங்கள் |
Could I have some sweet dish too? | ஏதேனும் இனிப்பு கிடைக்குமா? |
Could I have your address, please? | தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா? |
Could we have a spoon? | நாங்கள் ஒரு கரண்டியை வைத்துக்கொள்ள முடியுமா? |
Deva, Have you any work? | தேவா உனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா? |
Did the bus I have to board go? | நான் ஏறி செல்ல பேருந்து போய்விட்டதா? |
Do I have to study? | நான் படிக்க வேண்டுமா? |
Do not behave like this | இது போன்று நடக்காதே |
Do not have alcohol | மதுபானம் அருந்தாதே |
Do not worry. There is a portion vacant in my house itself. you can have that | கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம் |
Do not you have changes with you? | உன்னிடத்தில் சில்லறைகள் இல்லையா? |
Do not you have cutlets? | உங்களிடம் கட்லட் இல்லையா? |
Do not you know how to behave at whom | யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது |
Do you have a car? | உங்களிடம் மகிழூந்து உள்ளதா? |
Do you have a family? | உங்களுக்கு குடும்பம் இருக்கிறதா? |
Do you have a fever? | உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா? |
Do you have a minute? | உங்களுக்கு ஒரு நிமிடம் இருக்கிறதா? |
Do you have a mobile ? | நீங்கள் அலைபேசி வைத்திருக்கீறீர்களா ? |
Do you have a safe deposit box here? | இங்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகம் வைத்துள்ளீர்களா? |
Do you have a tattoo? | உங்களிடம் பச்சை உள்ளதா? |
Do you have a thing? | உங்களிடம் சிறிய பொருள் இருக்கிறதா? |
Do you have a ticket? | உங்களிடம் ஒரு நுழைவுச்சீட்டு இருக்கிறதா? |
Do you have any baggage? | உங்களிடம் பெட்டிப் படுக்கை இருக்கிறதா? |
Do you have any gum? | உங்களிடம் ஏதாவது கொந்து / பசை உள்ளதா? |
Do you have any money? | உன்னிடம் ஏதேனும் பணம் உள்ளதா? |
Do you have blankets? | உங்களிடம் போர்வைகள் உள்ளனவா? |
Do you have change? | நீங்கள் சில்லறை வைத்திருக்கிறீர்களா? |
Do you have head ache? | உங்களுக்கு தலைவலி இருக்கிறதா? |
Do you have online service with each account? | ஒவ்வொரு கணக்கிற்கும் உங்களுக்கு இணையதள சேவை உள்ளதா? |
Do you have raw mango? | மாங்காய் உங்களிடம் இருக்கின்றதா? |