English Sentences | Tamil Meaning |
---|---|
A danger smells | ஒரு ஆபத்து முகர்சிக்கும் |
A few months before, they fitted the electronic meter. | சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள். |
A garden is always a place of memories | பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள் |
A grammar book, you mean? | நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா? |
A letter has been written by me | ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது |
A lime juice and a banana | ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும் |
A month has passed since he came here | அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது |
Act time bound | காலம் கருதி செயல்படு |
Add some sugar. Then you will be able to eat | சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும் |
Admire you | உன்னை ரசிக்கின்றேன் |
Advocates discuss regarding the judgement | வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள் |
After seeing my brother, I returned home by bus | எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன் |
After the strom comes the calm | புயலுக்குப் பின் அமைதி |
Agreed. But do not fool me, as you did yesterday | ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது |
All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
All are requested to reach in time | எல்லோரும் உரிய நேரத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
All of the students have handed in their homework | மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள் |
All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
All right anything else I can do for you? | சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா? |
All right. you may get dressed now | ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம் |
All roads lead to Rome | அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும். |
All your problems will be solved here | உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு |
Allow me to live | என்னை வாழவிடுங்கள் |
Allow me to say | கூற அனுமதிக்கவும் |
Allow me to speak | என்னை பேச அனுமதியுங்கள் |
Always shake hands with your right hand | வலது கையைக் கொண்டு எப்பொழுதும் கை குலுக்கு |
Am I beautiful? | நான் அழகாக இருக்கிறேனா? |
Am I boring you? | நான் உங்களை சலிப்படையச் செய்கிறேனா? |
America is a known country | அமெரிக்கா ஒரு பிரபலமான நாடு |
America is the name of the country on the other side | அமெரிக்கா பூமிக்கு மறுபுறத்திலிருக்கும் நாடு |
An airplane comes over the hills | ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது |
An exciting day in my life | என் வாழ்க்கையில் ஒரு உற்சாகமான நாள் |
Anand, Which is your favorite dress? | ஆனந்த், உனக்கு பிடித்தமான ஆடை எது? |
And you are at financial crisis. There is change in your time after 2 months | மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற |
Another freedom struggle alone will save us, perhaps | ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது |
Ante antemeridian / A.M | காலை |
Any legend of the temple available here? I mean, in the form of a book? | கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில் |
Anything else I can do for you? | உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா? |
Anything is possible if there is true will | உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் |
Are you American? | நீங்கள் அமெரிக்கரா? |
Are not you going to cemetery? | இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா? |
Are you a graduate? | நீங்கள் ஒரு பட்டதாரியா? |
Are you a passenger? | நீங்கள் பிரயாணம் செய்பவரா? |
Are you a science or an arts student? | நீ விஞ்ஞானம் எடுத்துக் கொண்டுள்ளாயா அல்லது கலையா? |
Are you a student? | நீ ஒரு மாணவனா? |
Are you a tourist or on business? | நீங்கள் ஒரு சுற்றுலா பயணி அல்லது வணிகரா? |
Are you a vegetarian? | நீங்கள் சைவம் உண்பவரா? |
Are you also of the same view? | நீங்களும் இதே கருத்துடையவரா? |
Are you angry? | நீங்கள் கோபமாக இருகிறீர்களா? |
Are you busy now? | நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா? |
Are you confident of winning the match? | உங்களுக்கு விளையாட்டிலே வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? |
Are you confident of winning the test series? | உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? |
Are you doing servicing here? | இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா? |
Are you educated? | நீங்கள் படித்தவர் தானே? |
Are you fasting today? | நீ இன்று விரதம் இருக்கிறாயா? |
Are you fine? | நீங்கள் நலமா? |
Are you from Canada? | நீங்கள் கனடாவில் இருந்து வருகிறீர்களா? |
Are you getting enough sleep? | போதுமான தூக்கம் வருகிறதா? |
Are you going by school bus? | நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்? |
Are you happy? | நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? |