Make hay while the sun shines
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
Make the best of bad job
எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம்
Man proposes ; God disposes
தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
Man proposes and God disposes
மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் ஒன்று நினைக்கும்
Man without money is bow with out an arrow
பணமில்லாதவன் நடைப்பிணம்
Manners make the man
ஒழுக்கம் உயர் குலத்தின் சான்று
Many a slip between the cup and the lip
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
Many drops make a shower
சிறு துளி பெரு வெள்ளம்
Many hands make work light
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
Many strokes fell mighty oaks
சிறு உளி மலையைப் பிளக்கும்
Marriages are made in heaven
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
Measure thrice before you cut once
ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்
Mice will pray when the cat is out
பூனை இல்லாத ஊரில் எலி நாட்டமை
Might is right
தடி எடுத்தவன் தண்டல்காரன்
Might is right
வல்லன் வகுத்ததே சட்டம்
Misfortune makes foes of friends
பொல்லாத காலத்துக்கு புடலையும் பாம்பாகும்
Misfortunes never come single
பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும்
Money is good servant but a bad master
பணத்திற்கு அடிமையாகாதே
Money makes many things
பணம் பாதளம் வரைக்கும் பாயும்
Money makes the mare go
பணமென்றால் பிணமும் வாயை திறக்கும்
Mother and Motherland are greater than heaven
தாயும், தாய் நாடும் சொர்கத்தை விடச் சிறந்தவை